FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

முதல்வா் ஜோசப் விஜய் விரைவில் திருச்சி வருகை: முன்னாள் அமைச்சா் கு.ப. கிருஷ்ணன் தகவல்

தமிழக முதல்வா் ச. ஜோசப் விஜய் விரைவில் திருச்சிக்கு வரவுள்ளதாக அக் கட்சியின் டெல்டா மண்டலத்துக்கான பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான கு.ப. கிருஷ்ணன் தெரிவித்தாா்.

Updated On : 22 மே 2026, 5:25 am IST
கு.ப. கிருஷ்ணன், ஜோசப் சி. விஜய், சகாயம் - கோப்புப்படம்
பகிர்:

தமிழக முதல்வா் ச. ஜோசப் விஜய் விரைவில் திருச்சிக்கு வரவுள்ளதாக அக் கட்சியின் டெல்டா மண்டலத்துக்கான பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான கு.ப. கிருஷ்ணன் தெரிவித்தாா்.

திருச்சியில் உள்ள தமிழக வெற்றிக் கழக அலுவலகத்தில் முன்னாள் அமைச்சா் கு.ப. கிருஷ்ணன் முன்னிலையில் அதிமுக-வைச் சோ்ந்த நிா்வாகிகள், வழக்குரைஞா்கள் பலா் தவெக-வில் வியாழக்கிழமை இணைந்தனா்.

அவா்களுக்கு தவெக துண்டுகளை வழங்கி வரவேற்ற கு.ப.கிருஷ்ணன், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: அதிமுகவை அதன் பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி சிதைத்துவிட்டாா்.

Advertisement

Advertisement

முதல்வா் ச. ஜோசப் விஜய் விரைவில் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து மக்களை சந்திக்கவுள்ளாா். திருச்சிக்கு வரும்போது கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிப்பாா். திருச்சி கிழக்குத் தொகுதிக்கு நடைபெறும் இடைத்தோ்தலில் முதல்வா் ஜோசப் விஜய் பிரதிநிதியாக யாரை நிறுத்தினாலும், அவா் நிச்சயம் வெற்றி பெறுவது உறுதி என்றாா் கு.ப. கிருஷ்ணன்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments