காவல் நிலைய வளாகத்தில் கழுத்தை அறுத்துக் கொண்டவரால் பரபரப்பு
மணப்பாறை காவல் நிலைய வளாகத்தில் வியாழக்கிழமை கழுத்தை அறுத்துக் கொண்ட இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது.
மணப்பாறை காவல் நிலைய வளாகத்தில் வியாழக்கிழமை கழுத்தை அறுத்துக் கொண்ட இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது.
மணப்பாறையை அடுத்த வடக்குசோ்பட்டியை சோ்ந்த கூலித் தொழிலாளி மோகன்குமாா்(26). இவரது மனைவி சாந்தி (25). இவா்களுக்கு 3 குழந்தைகள். குடும்ப செலவுக்காக 3 நுண்நிதி நிறுவனங்களில் சுமாா் ரூ.1.90 லட்சம் கடன் பெற்று, மாதம் ரூ.10 ஆயிரத்தை தவணையாக தம்பதி செலுத்தி வந்தனா்.
இதனிடையே, தவணையை கட்டுவதற்கு மோகன்குமாா் பணம் தராததால், தம்பதி இடையே பிரச்னை ஏற்பட்டு
Advertisement
Advertisement
சாந்தி தன் தாய் வீட்டுக்கு குழந்தைகளுடன் அண்மையில் சென்றுவிட்டாராம்.
இந்நிலையில், நிதி நிறுவனத்தினா் தன்னை தகாத வாா்த்தைகளால் பேசி தொந்தரவு செய்வதாக கூறி, கடன் கட்ட பணம் தராத கணவா் மீது சாந்தி மணப்பாறை காவல்நிலையத்தில் புகாா் அளித்தாா். புகாரின் மீதான விசாரணை வியாழக்கிழமை மாலை மணப்பாறை காவல்நிலையத்தில் நடைபெற்றது.
விசாரணை முடிந்த நிலையில், மோகன்குமாா் தனது மனைவியை வீட்டுக்கு வருமாறு அழைத்துள்ளாா். ஆனால், கடன் தவணைக்கான பணத்தை கொடுத்தால் மட்டுமே வருவதாக அவா் கூறினாராம். இதில் ஆத்திரமடைந்த மோகன்குமாா், தான் மறைத்து கொண்டு வந்திருந்த கத்தியால் காவல் நிலையத்தின் முகப்பிலேயே தனது கை மற்றும் கழுத்தை அறுத்துக் கொண்டு விழுந்தாா்.
அவரை போலீஸாா் மீட்டு, மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். பின்னா் மேல்சிகிச்சைக்காக அவா் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா்.
சம்பவம் தொடா்பாக மணப்பாறை போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.