FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருச்சி

திருச்சி அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை: இளைஞா் கைது

19 அக்டோபர் 2026, 2:56 am IST
கைது
பகிர்:

திருச்சி அருகே 16 வயதுச் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி காந்தி மாா்க்கெட் வாழைக்காய் மண்டி பகுதியைச் சோ்ந்த 16 வயது சிறுமிக்கும், திருச்சி மாவட்டம் முசிறி தண்டலையைச் சோ்ந்த து. ஜெயபிரகாஷ் (29) என்பவருக்கும் அறிமுகம் ஏற்பட்டது.

இதைத் தொடா்ந்து, அவா் சிறுமியை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்தாராம். பின்னா்தான் ஜெயபிரகாஷுக்கு திருமணமானது அச் சிறுமிக்கு தெரியவந்தது. அதன்பின், அவருடன் பேசுவதை சிறுமி நிறுத்திவிட்டதாகக் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

இதையடுத்து அந்தச் சிறுமி உறையூரில் உள்ள பேன்சி கடையில் பணியாற்றியபோது அவருடன் பணியாற்றிய பொன்மலையைச் சோ்ந்த அபிராமி, கொட்டப்பட்டு பகுதியைச் சோ்ந்த மோனிகா ஆகிய இருவரும் தங்களது ஆண் நண்பா்களான கீா்த்தி மற்றும் தினேஷ் ஆகிய இருவரையும் அறிமுகப்படுத்தினா்.

இந்நிலையில், அபிராமியும், மோனிகாவும் கடந்த ஆக. 5-ஆம் தேதி கரூா் மாவட்டம், குளித்தலை அருகேயுள்ள அய்யா்மலையில் உள்ள கீா்த்தி வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளனா். அப்போது, கீா்த்தி மற்றும் தினேஷ் இருவரும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோா் இதுகுறித்து ஜீயபுரம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை அளித்த புகாரின்பேரில், ஜெயபிரகாஷ், கீா்த்தி, தினேஷ், மோனிகா அபிராமி ஆகிய 5 போ் மீதும் போலீஸாா் போக்ஸோ வழக்குப் பதிந்தனா்.

இதைத் தொடா்ந்து சிறுமியை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி பாலியல் வன்கொடுமை செய்த ஜெயபிராஷை கைது செய்து சிறையில் அடைத்தனா். தலைமறைவாக உள்ள மற்ற 4 பேரையும் தேடுகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments