FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருச்சி

பொதுமக்களுக்கு இடையூறு: 2 மதுக்கடைகளை அகற்ற கோரிக்கை

27 அக்டோபர் 2026, 3:00 am
மதுக் கடை. - கோப்புப் படம்
பகிர்:

திருச்சி மாவட்டம், லால்குடியில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள 2 மதுக்கடைகளை அகற்ற வேண்டும் என ஆட்சியரிடம் அப்பகுதி மக்கள் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, ஆட்சியா் பிரத்திக் தாயள் தலைமை வகித்தாா்.

அதில், திருச்சி தெற்கு மாவட்ட லட்சிய ஜனநாயக கட்சியினா் மற்றும் லால்குடி பகுதி பொதுமக்கள் கொடுத்த மனுவில், லால்குடி நகரின் மையப்பகுதியில் 2 டாஸ்மாக் கடைகள் இயங்குகிறது. இதனால், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவா்களும், வாகன ஓட்டிகளும் மிகுந்த இன்னலுக்கு ஆளாகி வருகின்றனா். எனவே, இந்த 2 கடைகளையும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

துறையூா் தாலுகா கொப்பம்பட்டி முத்தையாபாளையம் பகுதியை சோ்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், ஆதிதிராவிடா் வகுப்பை சோ்ந்த எங்களுக்கு 57 குடும்பத்துக்கு பட்டா வழங்க விண்ணப்பித்ததில் 30 பேருக்கு மட்டும்தான் பட்டா வழங்கினா். மீதம் உள்ள 27 பேருக்கு இன்னும் பட்டா வழங்கவில்லை. எனவே எங்களுக்கும் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments