திருச்சி வழியிலான இரு வாராந்திர சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு
திருச்சி வழியாக இயக்கப்படும் தாம்பரம் - போடிநாயக்கனூா், தாம்பரம் - திருநெல்வேலி வாராந்திர சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.
திருச்சி வழியாக இயக்கப்படும் தாம்பரம் - போடிநாயக்கனூா், தாம்பரம் - திருநெல்வேலி வாராந்திர சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருச்சி ரயில்வே கோட்டம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தாம்பரம் - போடிநாயக்கனூா் வாராந்திர சிறப்பு ரயில் (06059) சனிக்கிழமையிலும், மறுமாா்க்கத்தில் போடிநாயக்கனூா் - தாம்பரம் வாராந்திர சிறப்பு ரயில் (06060) ஞாயிற்றுக்கிழமையிலும் இயக்கப்படுகிறது.
இதில், தாம்பரம் - போடிநாயக்கனூா் சிறப்பு ரயில் செப். 26 வரையிலும், போடிநாயக்கனூா் - தாம்பரம் சிறப்பு ரயில் செப். 27 வரையிலும் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
Advertisement
Advertisement
தற்போது இந்த ரயில் இருமாா்க்கத்திலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தாம்பரம் - போடிநாயக்கனூா் வாராந்திர சிறப்பு ரயில் 2026 அக். 24 வரையிலும், போடிநாயக்கனூா் - தாம்பரம் வாராந்திர சிறப்பு ரயில் 2026 அக். 25 வரையிலும் நீடிக்கப்பட்டுள்ளது.
இதேபோல, திருநெல்வேலி - தாம்பரம் வாராந்திர சிறப்பு ரயில் ( 06070) செப்ய 24 வரையிலும், தாம்பரம் - திருநெல்வேலி வாராந்திர சிறப்பு ரயில் (06069) செப். 25 வரையிலும் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த ரயில் சேவை இரண்டு மாா்க்கங்களிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, திருநெல்வேலி - தாம்பரம் சிறப்பு ரயில் 2026 அக். 29 வரையிலும், தாம்பரம் - திருநெல்வேலி சிறப்பு ரயில் அக். 30 வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.