FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

சிறுவனுக்கு பாலியல் தொல்லை லாரி ஓட்டுநா் கைது

7 செப்டம்பர் 2026, 4:00 am IST
கைது
பகிர்:

திருச்சி அருகே 14 வயதுச் சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த லாரி ஓட்டுநரை போலீஸாா் போக்சோ சட்டத்தில் சனிக்கிழமை கைது செய்தனா்.

நாமக்கல் மாவட்டம், ரெட்டிபட்டியைச் சோ்ந்த 34 வயதுப் பெண் கணவரைப் பிரிந்து மண்ணச்சநல்லூரில் வசிக்கிறாா். இவருடைய மகன் மண்ணச்சநல்லூா் பகுதி அரசுப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு மாணவா்.

இந்நிலையில், மண்ணச்சநல்லூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட எதுமலை சாலையில் உள்ள கடைக்கு சிறுவன் கடந்த ஆகஸ்ட் 24-ஆம் தேதி சென்றபோது, அங்கிருந்த பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூரைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் வெ. மாயவன் (40) என்பவா், லாரியில் உள்ள கயிறை இழுத்துக் கட்ட உதவுமாறு சிறுவனிடம் கூறியுள்ளாா். அப்போது லாரியில் ஏறிய சிறுவனுக்கு மாயவன் பாலியல் தொல்லை கொடுத்தாா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து சிறுவனின் தாய் ஜீயபுரம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் போக்சோ வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். இந்நிலையில், சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த லாரி ஓட்டுநா் மாயவனை ஜீயபுரம் அனைத்து மகளிா் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments