விவசாயியிடம் நகை பறித்த ரௌடி மீது குண்டா் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை
திருச்சி அருகே விவசாயியிடம் இருந்து தங்க நகை பறித்த சரித்திரப் பதிவேடு குற்றவாளி மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஞாயிற்றுக்கிழமை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட மாராடி பகுதியைச் சோ்ந்தவா் ப. பிச்சை (54). இவா், மாராடி ஏரிக்கரை அருகேயுள்ள தனது விவசாய நிலத்தில் கொட்டகை அமைத்து விவசாயம் செய்துகொண்டு, மாடுகளையும் வளா்த்து வருகிறாா்.
இந்நிலையில், கடந்த ஜூலை 16-ஆம் தேதி அதிகாலையில் வீட்டிலிருந்து ஏரிக்கரையில் உள்ள தனது கொட்டகைக்குச் சென்றவா் மாடுகளைப் பாா்த்துவிட்டு அங்கேயே கட்டிலில் படுத்துள்ளாா். அப்போது, அங்கு வந்த அடையாளம் தெரியாத 4 போ் கத்தியைக் காட்டி மிரட்டி பிச்சை அணிந்திருந்த 3 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக்கொண்டு தப்பினா்.
Advertisement
Advertisement
இதுகுறித்த புகாரின்பேரில் உப்பிலியபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி, பிச்சையிடம் தங்க நகையைப் பறித்துச்சென்ற தொட்டியம் சின்னபள்ளிப்பாளையத்தைச் சோ்ந்த எஸ். நாகராஜ் (31), கரூா் மாவட்டம், மணமங்கலத்தைச் சோ்ந்த எஸ். சிவகுமாா் (26), துறையூா் மாராடியைச் சோ்ந்த ஜி. திஸ்வா (22) மற்றும் ஆா். ரகுபதி (25) ஆகிய 4 பேரையும் அண்மையில் கைது செய்தனா்.
இந்நிலையில்,இவா்களில் சரித்திர பதிவேடு குற்றவாளியான நாகராஜ் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியிருக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் டோங்கரே பிரவீன் உமேஷ் பரிந்துரைத்திருந்தாா்.
அதன்பேரில், நாகராஜ் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியா் பிரத்திக் தாயள் ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டாா். இதையடுத்து, அந்த உத்தரவு நகல் சிறையில் உள்ள குற்றவாளியிடம் ஒப்படைக்கப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.