FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வேலூர்

அரக்கோணம் நகரில் குடிநீர் பஞ்சம் தீர்ப்பேன்: அதிமுக வேட்பாளர் வாக்குறுதி

அரக்கோணம், அக். 8: அரக்கோணம் நகரில் இப்போது நிலவும் குடிநீர் பஞ்சத்தை போக்கி, தினமும் குடிநீர் வழங்க தமிழக அரசு மூலம் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என நகர்மன்றத் தலைவருக்கான அதிமுக வேட்பாளர் பவானி

Updated On : 20 செப்டம்பர் 2012, 5:18 am IST
பகிர்:

அரக்கோணம், அக். 8: அரக்கோணம் நகரில் இப்போது நிலவும் குடிநீர் பஞ்சத்தை போக்கி, தினமும் குடிநீர் வழங்க தமிழக அரசு மூலம் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என நகர்மன்றத் தலைவருக்கான அதிமுக வேட்பாளர் பவானி கருணாகரன் கூறினார்.

 அரக்கோணம் 32-ஆவது வார்டில் சனிக்கிழமை வாக்கு சேகரித்தபோது, அவர் பேசியது:

 குடிநீர் ஆதாரங்கள் அனைத்தும் சரியாக பராமரிக்கப்படாததாலேயே, அரக்கோணம் நகரில் சரியான குடிநீர் விநியோகம் நடைபெறவில்லை. திருத்தணி கூட்டுக் குடிநீர்த் திட்டத்தில், குடிநீர் விநியோகக் குழாய்கள் புதைக்கும் பணிகள் சரியாக நடைபெறவில்லை. இதனால், குடிநீர் வீணாகுகிறது.

Advertisement

Advertisement

 இத்திட்டம் தொடங்கப்பட்ட பிறகும் குடிநீர் விநியோகப் பணி சீராகவில்லை. இப்போது காவிரி நீர் கொண்டு வருவதற்கான பணிகள் நடைபெறுகின்றன. இந்தப் பணி சீரிய அளவில் நிறைவேறியதும், அரக்கோணம் நகரில் தினமும் குடிநீர் விநியோகம் நடைபெறும்.

 குடிநீர் குழாய் இணைப்புகள் நகராட்சியால் அங்கீகரிக்கப்பட்ட இணைப்புகளாகவே இருக்க நடவடிக்கை எடுக்கப்படும். குடிநீர் விநியோகத்துக்கு கூடுதல் வரி விதிக்காமலேயே சீர்படுத்தப்படும். தேவைக்கேற்ப குடிநீர் இணைப்புகள் தாராளமாக வழங்கப்படும் என்றார் பவானி கருணாகரன்.

 பிரசாரத்தின்போது 32-ஆவது வார்டு வேட்பாளர் ஜெர்ரி, நகர அதிமுக செயலர் துரை.குப்புசாமி, 31ஆவது வேட்பாளர் செல்வம், 33ஆவது வார்டு வேட்பாளர் பொன்.பார்த்தீபன், மாவட்ட ஜெயலலிதா பேரவை நிர்வாகி கந்தன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments