பாதம் பணிகிறோம் பணம் வாங்கி வாக்களிக்காதீர்..!
வாணியம்பாடி அக். 8: உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களின் வெற்றி வாய்ப்புக்காக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதோடு, வாக்கு சேகரிப்பின்போது வாக்காளர்களின் காலில் விழ
வாணியம்பாடி அக். 8: உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களின் வெற்றி வாய்ப்புக்காக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதோடு, வாக்கு சேகரிப்பின்போது வாக்காளர்களின் காலில் விழுந்து ஆசி பெறுவதிலும் தவறுவதில்லை.
இதுமட்டுமன்றி, வெற்றி வாய்ப்புக்காக ஆதரவாளர்கள், வாக்காளர்களை கவர பல்வேறு உத்திகளை வேட்பாளர்கள் கையாண்டு வருகின்றனர்.
இந்நிலையில், கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும், வாக்களிக்கப் பணம் வாங்கக் கூடாது எனக் கூறி வாணியம்பாடியில் சத்தியாகிரக இயக்கத்தினர் நூதனப் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதாவது, வாக்காளர்களின் காலில் விழுந்து இக்கோரிக்கையை வைப்பதுதான்.
Advertisement
Advertisement
சென்னம்பேட்டையில் இவ்வமைப்பின் தலைவர் எம்.ராமகிருஷ்ணன், அனில் சந்திரசேகர், குராணமூர்த்தி, ஈஸ்வரன் உள்ளிட்டோர் சனிக்கிழமை இப்பிரசாரம் மேற்கொண்டனர்.
வேட்பாளர்கள் காலில் விழுவது உண்டு; ஆனால், கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும் என நூதன முறையில் இவர்கள் நடத்தும் பிரசாரம் ஒரளவுக்கு யோசிக்க வேண்டியிருக்கு என்கின்றனர் விழிப்புணர்வு பெற்ற வாக்காளர்கள்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.