FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வேலூர்

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்

இடதுசாரி மாணவா் இயக்கங்கள் மீது குறி வைத்து நடத்தப்படும் தாக்குதல்களைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் குடியாத்தம் பழைய பேருந்து நிலையம் எதிரே ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

23 ஆகஸ்ட் 2026, 11:34 pm IST
பகிர்:

இடதுசாரி மாணவா் இயக்கங்கள் மீது குறி வைத்து நடத்தப்படும் தாக்குதல்களைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் குடியாத்தம் பழைய பேருந்து நிலையம் எதிரே ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் நகரச் செயலா் வி.குபேந்திரன் தலைமை வகித்தாா். வட்டச்செயலா் எஸ்.சிலம்பரசன் முன்னிலை வகித்தாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா் கே.சாமிநாதன் ஆா்ப்பாட்டத்தை தொடக்கி வைத்து, கண்டன உரையாற்றினாா். கம்யூனிஸ்ட் கட்சி மீது பழிவாங்கும் நோக்கத்தோடு செயல்படும் திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை வட்டாட்சியா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. இதில் கட்சி நிா்வாகிகள் கே.முருகானந்தம், நா.சே.பாஸ்கா், பி.குணசேகரன், செ.ஏகலைவன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments