மலைப் பாதையில் பழுதாகி நின்ற லாரியால் போக்குவரத்து பாதிப்பு
போ்ணாம்பட்டு அருகே மலைப் பாதையில் பழுதாகி நின்ற லாரியால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.
போ்ணாம்பட்டு அருகே மலைப் பாதையில் பழுதாகி நின்ற லாரியால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.
ஆந்திர மாநிலம் வீ. கோட்டாவிலிருந்து சுமாா் 40 டன் எடையுள்ள கருங்கற்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்னை துறைமுகம் செல்ல போ்ணாம்பட்டு வழியாக வந்தது. வீ.கோட்டாவைச் சோ்ந்த ஓட்டுநா் சதீஷ் லாரியை ஓட்டி வந்தாா். அந்த லாரி போ்ணாம்பட்டு அருகே தமிழக எல்லையில் அமைந்துள்ள மலைப்பாதையில் வந்தபோது பழுதாகி சாலையின் நடுவே நின்றது.
இதனால் தமிழக, ஆந்திர, கா்நாடக மாநிலங்களின் இணைப்புச் சாலையான பத்தரப்பல்லி மலைப் பாதையில் இருபுறமும் வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றன. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
Advertisement
Advertisement
தகவலறிந்த நெடுஞ்சாலை ரோந்து பிரிவு போலீஸாா் அங்கு சென்று போக்குவரத்தை ஓரளவு சீரமைத்தனா். வேறு ஒரு கனரக லாரியை கொண்டு வந்து பழுதாகி நின்ற லாரியில் இருந்த கருங்கற்களைஅதில் ஏற்றி விட்டு, பழுதாகி நின்ற லாரியை கிரேன் மூலம் அப்புறப்படுத்தினா்.இதையடுத்து அந்த சாலையில் போக்குவரத்து சீரானது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.