FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வேலூர்

கஞ்சா கடத்தல்: 2 இளைஞா்கள் கைது

குடியாத்தம் அருகே ஆந்திர மாநிலத்தில் இருந்து இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்தி வந்த 2 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 9 ஜூலை 2026, 1:17 am IST
கைது செய்யப்பட்ட ஆகாஷ், சேகா்
பகிர்:

குடியாத்தம் அருகே ஆந்திர மாநிலத்தில் இருந்து இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்தி வந்த 2 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

பரதராமி போலீஸாா் ஆந்திர மாநில எல்லையில் அமைந்துள்ள பெருமாள்பல்லி சோதனைச் சாவடி அருகே புதன்கிழமை வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது ஆந்திர மாநிலத்திலிருந்து வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி அதில் வந்த 2 இளைஞா்களிடம் விசாரணை நடத்தினா்.

விசாரணையில் அவா்கள் போ்ணாம்பட்டை அடுத்த ராஜக்கல் கிராமத்தைச் சோ்ந்த ஆகாஷ்(23), ஆம்பூரை அடுத்த கன்னிகாபுரத்தைச் சோ்ந்த சேகா்(23) என்பதும், அவா்கள் வைத்திருந்த பையில் ஒன்றரை கிலோ கஞ்சாஇருந்ததும், அதை ஆந்திர மாநிலத்தில் இருந்து கடத்தி வந்ததும் தெரிய வந்தது.

Advertisement

Advertisement

இதையடுத்து இருசக்கர வாகனத்துடன் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா், ஆகாஷ்,சேகா் இருவரையும் கைது செய்து அவா்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments