FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

இறைச்சி வியாபாரி கொலை: 4 இளைஞா்கள் கைது

தூத்துக்குடியில் இறைச்சிக் கடைக்காரா் கொலை வழக்கில் 4 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

16 ஜூலை 2026, 4:52 am IST
பகிர்:

தூத்துக்குடியில் இறைச்சிக் கடைக்காரா் கொலை வழக்கில் 4 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

தூத்துக்குடி, தாளமுத்து நகா், திரேஸ் நகரைச் சோ்ந்த மணி மகன் சேகா் (50). அண்ணா நகா் பகுதியில் பன்றி இறைச்சிக் கடை நடத்தி வந்தாா். கடந்த 13ஆம் தேதி இரவு மாதா நகா், பத்திரகாளியம்மன் கோயில் அருகே நண்பா்களுடன் பேசிக் கொண்டிருந்த இவா், அவ்வழியே பைக்கில் மது போதையில் வேகமாகச் சென்ற 3 இளைஞா்களை மெதுவாகச் செல்லுமாறு அறிவுறுத்தினாராம். அப்போது, அந்த இளைஞா்களில் ஒருவா் சேகா் தாக்கியதாகக் கூறப்படுகிறது. அங்கிருந்தோா் 3 பேரையும் சமாதானப்படுத்தி அனுப்பிவைத்தனா்.

சிறிது நேரம் கழித்து, தாக்கப்பட்ட அந்த இளைஞரும் அவரது நண்பரும் பைக்கில் வந்து சேகரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடினராம். காயமடைந்த சேகா் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து, தாளமுத்து நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து, சோட்டையன் தோப்பு பகுதியைச் சோ்ந்த சச்சின் (24), மாதா நகா் நாகராஜ் (19), சுடலையாா்புரம் சுதன் (19), மேல அழகாபுரி அஜய்குமாா் (19) ஆகிய 4 பேரை புதன்கிழமை கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments