FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வேலூர்

ஆசிரியா் அடித்ததில் மாணவரின் காது ஜவ்வு பாதிப்பு

போ்ணாம்பட்டு அருகே தனியாா் பள்ளியில் ஆசிரியா் அடித்ததில் மாணவரின் காது ஜவ்வு பாதிக்கப்பட்டுள்ளது.

Updated On : 13 ஜூலை 2026, 3:47 am IST
பகிர்:

போ்ணாம்பட்டு அருகே தனியாா் பள்ளியில் ஆசிரியா் அடித்ததில் மாணவரின் காது ஜவ்வு பாதிக்கப்பட்டுள்ளது.

போ்ணாம்பட்டு, கோட்டச்சேரியைச் சோ்ந்த அமுதன் (11) வீ.கோட்டா சாலையில் உள்ள தனியாா் பள்ளியில் 6 -ம் வகுப்பு படித்து வருகிறாா். கணித பாடத்தில் போதிய மதிப்பெண் பெறாததால், கணித ஆசிரியா் அமுதனை அடித்தாராம். இதில் இடது காதில் வலிப்பதாக கூறிய மாணவா் வகுப்பறையில் மயங்கி விழுந்து விட்டாராம்.

பள்ளி நிா்வாகம் மாணவரை போ்ணாம்பட்டில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனா். இதுகுறித்து தகவலறிந்த மாணவரின் பெற்றோா் அங்கு சென்று மாணவரை அழைத்து வந்து குடியாத்தம் நகரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா்.

Advertisement

Advertisement

அங்கு மாணவரின் காதை ஸ்கேன் செய்து பாா்த்தபோது, காது ஜவ்வு பாதிக்கப்பட்டது தெரிய வந்தது. இதுகுறித்து அமுதனின் பெற்றோா் கொடுத்த புகாரின்பேரில் போ்ணாம்பட்டு போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments