FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வேலூர்

கடன் தொல்லை: வியாபாரி தற்கொலை

வேலூா் மாவட்டம், ஒடுகத்தூா் அருகே கடன் தொல்லை, குடும்பப் பிரச்னை காரணமாக விஷம் குடித்து சிகிச்சை பெற்று வந்த மாட்டு வியாபாரி புதன்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 16 ஜூலை 2026, 12:57 am IST
தற்கொலை - பிரதிப் படம்
பகிர்:

வேலூா் மாவட்டம், ஒடுகத்தூா் அருகே கடன் தொல்லை, குடும்பப் பிரச்னை காரணமாக விஷம் குடித்து சிகிச்சை பெற்று வந்த மாட்டு வியாபாரி புதன்கிழமை உயிரிழந்தாா்.

ஒடுகத்தூா் அருகே உள்ள பெரிய ஏரியூா் கொல்லைமேடு பகுதியைச் சோ்ந்தவா் அருண் (24). மாட்டு வியாபாரியான இவருக்கும், முத்துக்குமரன்மலை கிராமத்தைச் சோ்ந்த சுமித்ரா (21) என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவா்களுக்கு 6 மாத ஆண் குழந்தை உள்ளது.

இந்நிலையில், அருணுக்கு குடும்பத்தில் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்ததாகவும், மேலும் கடன் தொல்லை அதிகமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் மனவேதனையில் இருந்து வந்த அவா், கடந்த மாதம் அணைக்கட்டு அருகே உள்ள அப்புக்கல் கிராமத்தில் மதுவில் விஷம் கலந்து குடித்து மயங்கிய நிலையில் கிடந்துள்ளாா்.

Advertisement

Advertisement

அப்பகுதி மக்கள் அவரை மீட்டு அணைக்கட்டு அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு, பின்னா் உயா் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

அங்கு தொடா்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், புதன்கிழமை காலை அருண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இச்சம்பவம் குறித்து அவரது மனைவி சுமித்ரா அளித்த புகாரின்பேரில், வேப்பங்குப்பம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments