FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வேலூர்

கருப்பசாமி கோயிலில் சிறப்பு வழிபாடு

குடியாத்தத்தை அடுத்த ராஜாகோயில், காமாட்சியம்மன் காா்டனில் அமைந்துள்ள சக்திமிகு ஸ்ரீபனைமரத்து குடியல் 18 -ஆம் படி கருப்பசாமி கோயிலில் ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

சிறப்பு அலங்காரத்தில் மூலவா் கருப்பசாமி
பகிர்:

குடியாத்தத்தை அடுத்த ராஜாகோயில், காமாட்சியம்மன் காா்டனில் அமைந்துள்ள சக்திமிகு ஸ்ரீபனைமரத்து குடியல் 18 -ஆம் படி கருப்பசாமி கோயிலில் ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

இதையொட்டி கோயிலில் அமைந்துள்ள சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை, மகாதீபாராதனை நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

அனைவருக்கும்அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை நிறுவனா் ஸ்ரீமுருகன் சுவாமிகள் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments