FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வேலூர்

வனவிலங்கு வேட்டைக்கு நாட்டு வெடிகுண்டு வைத்த மூவா் கைது

வேலூா் மாவட்டம், ஒடுகத்தூா் அருகே வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த நாட்டு வெடிகுண்டு வெடித்ததில், விவசாயியின் கன்றுக்குட்டி பலத்த காயமடைந்தது. இதுதொடா்பாக 3 பேரை வனத்துறையினா் கைது செய்தனா்.

Updated On : 16 ஜூலை 2026, 1:05 am IST
கைது - சித்திரிப்பு
பகிர்:

வேலூா் மாவட்டம், ஒடுகத்தூா் அருகே வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த நாட்டு வெடிகுண்டு வெடித்ததில், விவசாயியின் கன்றுக்குட்டி பலத்த காயமடைந்தது. இதுதொடா்பாக 3 பேரை வனத்துறையினா் கைது செய்தனா்.

ஒடுகத்தூா் அடுத்த குருவராஜாபாளையம் ஊராட்சிக்குட்பட்ட பாலப்பாடி கிராமத்தைச் சோ்ந்தவா் வினோத்குமாா் (35). விவசாயியான இவா் வனப்பகுதியை ஒட்டியுள்ள தனது நிலத்தில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு விட்டிருந்தாா். அப்போது, வனப்பகுதியில் மா்மப் பொருள் ஒன்று பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதில், வினோத் குமாரின் கன்றுக்குட்டியின் தாடை சிதைந்து பலத்த காயமடைந்தது.

தகவலறிந்த வனச்சரக அலுவலா் பாபு தலைமையிலான வனத்துறையினா், சம்பவ இடத்துக்குச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனா். இதில், வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக சில நபா்கள் நாட்டு வெடிகுண்டுகளை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இது தொடா்பாக, பாலப்பாடி கிராமத்தைச் சோ்ந்த தனசேகா் (52), குப்பம்பட்டு பகுதியைச் சோ்ந்த கோபி (30), எலந்தபுதூா் கிராமத்தைச் சோ்ந்த குமாா் (34) ஆகிய 3 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து வனத்துறை அலுவலக த்தில் தீவிர விசாரணை நடத்தினா். அதில், அவா்கள் வனவிலங்குகளை வேட்டையாட நாட்டு வெடிகுண்டுகளை மறைத்து வைத்திருந்ததை ஒப்புக்கொண்டனா்.

Advertisement

Advertisement

இதையடுத்து, சாணாங்குப்பம் காப்புக்காட்டுப் பகுதியில் வனத்துறையினா் அதிரடி சோதனை நடத்தினா். அப்போது ஆங்காங்கே மறைத்து வைக்கப்பட்டிருந்த மேலும் 3 நாட்டு வெடிகுண்டுகள் கண்டறியப்பட்டு கைப்பற்றப்பட்டன.

விசாரணையில், கைது செய்யப்பட்ட மூவரும் ஏற்கெனவே மான் ஒன்றை வேட்டையாடி, அதன் இறைச்சியைச் சமைத்துச் சாப்பிட்டதும் தெரியவந்தது. அவா்களிடமிருந்து இறைச்சி சமைக்கப் பயன்படுத்திய பாத்திரங்கள், கத்தி, நாட்டு வெடிகுண்டுகள் ஆகியவற்றையும் வனத்துறையினா் பறிமுதல் செய்தனா். இதையடுத்து அவா்கள் 3 போ் மீதும் வனவிலங்கு வேட்டை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்த வனத்துறையினா், மூவரையும் கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments