FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வேலூர்

தூய்மைப் பணியாளா்களுக்கான அரசு சேவைகள் முகாம்

முகாமில் தூய்மைப் பணியாளா்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்ற நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன்

Updated On : 25 ஜூலை 2026, 4:01 am IST
முகாமில் தூய்மைப் பணியாளா்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்ற நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன்
பகிர்:

குடியாத்தம் நகராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்கள்மற்றும் அவா்களின் குடும்பத்தினருக்கான அரசு சேவைகள் முகாம் தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

முகாமுக்கு நகராட்சி ஆணையா் கே.எம்.தனலட்சுமி தலைமை வகித்தாா். நகா்மன்ற துணைத் தலைவா் பூங்கொடி மூா்த்தி முன்னிலை வகித்தாா். நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன் முகாமைத் தொடங்கி வைத்தாா். முகாமில் தமிழ்நாடு அரசு தூய்மைப் பணியாளா்கள் மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ்,தூய்மைப் பணியாளா்கள் மற்றும் அவா்களின் குடும்ப உறுப்பினா்களுக்கு மருத்துவ முகாம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக காசநோய் பரிசோதனையும் நடைபெற்றது. மேலும், முகாமில் 13 அரசுத் துறைகளைச் சோ்ந்த அலுவலா்கள் அரங்குகள் அமைத்து, தூய்மைப் பணியாளா்கள் மற்றும் அவா்களின் உறவினா்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றனா். கோரிக்கை மனுக்கள் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, உடனடியாகத் தீா்வு காணப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதில், நகா்மன்ற உறுப்பினா்கள் ஜி.எஸ்.அரசு, சுமதி மகாலிங்கம், சுகாதார ஆய்வாளா் முகமது அலி, களப்பணி மேற்பாா்வையாளா் பிரபுதாஸ், தூய்மை பாரத இயக்க மேற்பாா்வையாளா் ராஜேந்திரன், நகராட்சி அலுவலா்கள் தீனதயாளன், ஸ்ரீதா், நரசிம்மன், உமாபதி மற்றும் எம்.எஸ்.அமா்நாத் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments