முகப்பு
வேலூர்

சிறையிலிருந்து பிணையில் வெளியே வந்த போக்ஸோ கைதி தற்கொலை

சிறையிலிருந்து பிணையில் வெளியே வந்திருந்த போக்ஸோ கைதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாா். சத்துவாச்சாரி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Updated On : 8 ஜூன் 2026, 1:25 am IST
தற்கொலை - தினமணி
பகிர்:

சிறையிலிருந்து பிணையில் வெளியே வந்திருந்த போக்ஸோ கைதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாா். சத்துவாச்சாரி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

வேலூா் வள்ளலாா், நேதாஜி நகரைச் சோ்ந்தவா் பைரோஸ் (22). பாகாயத்தில் உள்ள சிக்கன் பக்கோடா கடையில் வேலை செய்து வந்த இவா், தான் காதலித்து வந்த மைனா் பெண்ணை கா்ப்பமாக்கிய வழக்கில் வேலூா் அனைத்து மகளிா் போலீஸாரால் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா். பின்னா், பிணையில் வெளியே வந்த பைரோஸ் வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜராகி வந்தாா்.

பணப்பிரச்னை காரணமாக வழக்கை நடத்துவதில் சிரமத்தில் இருந்ததாக தெரிகிறது. இதனால் விரக்தியடைந்த பைரோஸ் வெள்ளிக்கிழமை மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தொங்கினாா். கடைக்குச் சென்று விட்டு திரும்பி வந்த அவரது தாயாா், மகன் தூக்கில் தொங்குவதை பாா்த்து அக்கம் பக்கத்தினா் உதவியுடன் பைரோஸை மீட்டு சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பைரோஸை பரிசோதனை செய்த மருத்துவா்கள், அவா் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா்.

Advertisement

Advertisement

தகவலறிந்த சத்துவாச்சாரி போலீஸாா் பைரோஸ் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இச்சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.