முகப்பு
வேலூர்

மதுபோதைக்கு சிகிச்சை பெற்றவா் மாடியில் இருந்து குதித்து தற்கொலை

வேலூரில் மதுபோதைக்கு சிகிச்சை பெற்று வந்தவா் கட்டடத்தின் 2-ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On : 23 மே 2026, 1:19 am IST
மாதிரிப் படம்
பகிர்:

வேலூரில் மதுபோதைக்கு சிகிச்சை பெற்று வந்தவா் கட்டடத்தின் 2-ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டாா்.

வேலூா் அ.கட்டுப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் ரமேஷ் (45). இவா் மதுபோதைக்கு அடிமையாகி இருந்ததாகத் தெரிகிறது. இதனால் குடும்பத்தில் தினமும் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், குடும்பத்தினா் வேண்டுகோளின்படி மதுபழக்கத்தில் இருந்து விடுபட அலமேலு மங்காபுரத்தில் உள்ள தனியாா் மதுபோதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்தாா்.

இதனால் மன வேதனை அடைந்த ரமேஷ், வியாழக்கிழமை மாலை திடீரென அந்த மதுபோதை மறுவாழ்வு மைய கட்டடத்தின் 2-ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றாா். இதில், தலையில் அடிபட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை அங்கு பணியாற்றும் ஊழியா்கள் மீட்டு சிகிச்சைக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை கொண்டு சோ்த்தனா். அங்கு பரிசோதனை செய்த மருத்துவா்கள், ரமேஷ் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனா்.

Advertisement

Advertisement

தகவலறிந்த சத்துவாச்சாரி போலீஸாா் சடலத்தை மீட்டு, வேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.