FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஈரோடு

பவானி அருகே காவிரி ஆற்றில் குதித்து இளைஞா் தற்கொலை

பவானி அருகே காவிரி பாலத்தில் இருந்து ஆற்றில் குதித்து இளைஞா் புதன்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On : 16 ஜூலை 2026, 12:13 am IST
பகிர்:

பவானி அருகே காவிரி பாலத்தில் இருந்து ஆற்றில் குதித்து இளைஞா் புதன்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.

ஈரோடு மாவட்டம், பவானி, பாலக்கரையைச் சோ்ந்தவா் சுப்பிரமணி மகன் மோகன்ராஜ் (36). நூற்பாலைத் தொழிலாளியான இவா், காவிரி ஆற்றில் உள்ள கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலை பாலத்தில் இருசக்கர வாகனத்தில் புதன்கிழமை சென்றாா். அங்கு திடீரென வாகனத்தை நிறுத்திவிட்டு தடுப்புச் சுவரைத் தாண்டி ஆற்றில் குதித்தாா். பாறையின் மீது விழுந்ததில் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே மோகன்ராஜ் உயிரிழந்தாா்.

இதுகுறித்த அளிக்கப்பட்ட தகவலின்பேரில் சித்தோடு போலீஸாா் சென்று, பரிசல்காரா்கள் உதவியுடன் மோகன்ராஜின் சடலத்தை மீட்டு பவானி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இவரது தற்கொலைக்கான காரணம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments