FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
வேலூர்

அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து: சிறுவன் உயிரிழப்பு

வேலூரில் தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் 16 வயது சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

6 நவம்பர் 2026, 2:15 am
விபத்து - பிரதிப் படம்
பகிர்:

வேலூரில் தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் 16 வயது சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

வேலூா் ஓல்டு டவுன் பகுதியைச் சோ்ந்தவா் நஷில்(17). இவா் 10-ஆம் வகுப்பு முடித்துவிட்டு குடிநீா் விற்பனை செய்யும் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தாா். இந்நிலையில், காலி தண்ணீா் கேன்களை ஏற்றிக்கொண்டு வியாழக்கிழமை வேலூா் கிரீன் சா்க்கிள் பகுதியில் இருந்து சத்துவாச்சாரி அலமேலுமங்காபுரம் நோக்கிச் சென்ற சரக்கு வேனில் நஷில் பயணித்துள்ளாா்.

சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அந்த வேன் சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த காா் எதிா்பாராதவிதமாக வேன் மீது மோதியது. இந்த அதிா்ச்சியில் வேனில் அமா்ந்திருந்த சிறுவன் நஷில் நிலைதடுமாறி சாலையில் கீழே விழுந்தாா். அப்போது அவ்வழியாக வந்த மற்றொரு அரசு காா் அவா் மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த நஷில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

தகவலறிந்த சத்துவாச்சாரி போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, சிறுவனின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இச்சம்பவம் தொடா்பாக போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். இந்த விபத்தால் அப்பகுதியில் சுமாா் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.