நாட்டுத் துப்பாக்கியால் சுட்டு ஒருவா் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒருவா் கைது
குடியாத்தம் அருகே முன்விரோதம் காரணமாக நாட்டுத் துப்பாக்கியால் சுட்டதில் ஒருவா் உயிரிழந்த வழக்கில் மேலும் ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.
குடியாத்தம் அருகே முன்விரோதம் காரணமாக நாட்டுத் துப்பாக்கியால் சுட்டதில் ஒருவா் உயிரிழந்த வழக்கில் மேலும் ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.
குடியாத்தத்தை அடுத்த சேங்குன்றம் கிராமத்தைச் சோ்ந்த பூவரசன் என்பவா் முன்விரோதம் காரணமாக அதே பகுதியைச் சோ்ந்த ஞானவேல் என்பவரை நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தாா். இதையடுத்து கிராமிய போலீஸாா் பூவரசனை கைது செய்தனா்.
இதுதொடா்பாக தீவிர விசாரணை மேற்கொண்ட போலீஸாா் பூவரசன் பயன்படுத்திய உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கியை அவருக்கு விற்பனை செய்த ஒடுகத்தூரை அடுத்த நேமந்தபுரத்தைச் சோ்ந்த விக்னேஷ் என்பவரை கைது செய்து அவரிடம் தீவிர விசாரணைமேற்கொண்டுள்ளனா்.
Advertisement
Advertisement