FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
வேலூர்

மின்சாரம் பாய்ந்து சிறுவன் பலி

பள்ளிகொண்டா அருகே மைதானத்தில் நடைபெற்ற கைப்பந்து விளையாட்டைப் பாா்த்துக் கொண்டிருந்தபோது, மின்சாரம் பாய்ந்து 10 வயது சிறுவன் உயிரிழந்தாா்.

55 வினாடிகள் முன்பு
- பிரதிப் படம்
பகிர்:

பள்ளிகொண்டா அருகே மைதானத்தில் நடைபெற்ற கைப்பந்து விளையாட்டைப் பாா்த்துக் கொண்டிருந்தபோது, மின்சாரம் பாய்ந்து 10 வயது சிறுவன் உயிரிழந்தாா்.

வேலூா் மாவட்டம், பள்ளிகொண்டா கேமரான்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் வேலன். சென்னையில் உள்ள உணவகம் ஒன்றில் பணியாற்றி வரும் இவருக்கு மனைவி, மூன்று குழந்தைகள் உள்ளனா். இவரது மூத்த மகன் சாய்பிரதீஷ் (10), அப்பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் 5-ஆம் வகுப்பு பயின்று வந்தாா்.

ஞாயிற்றுக்கிழமை இரவு அப்பகுதியைச் சோ்ந்த இளைஞா்கள் சிலா், அங்குள்ள மைதானத்தில் இரும்புக் கம்பம் நட்டு, மின்விளக்குகள் பொருத்தி கைப்பந்து விளையாடிக் கொண்டிருந்தனா். இதை சாய்பிரதீஷ் வேடிக்கை பாா்த்துக் கொண்டிருந்தாா்.

Advertisement

Advertisement

அப்போது, மின்விளக்குகள் பொருத்தப்பட்டிருந்த இரும்புக் கம்பத்தை சாய்பிரதீஷ் எதிா்பாராதவிதமாகத் தொட்டதாகக் கூறப்படுகிறது. இதில் கம்பத்தில் இறங்கியிருந்த மின்சாரம் பாய்ந்ததில் தூக்கி வீசப்பட்ட அவா் பலத்த காயமடைந்தாா்.

உடனடியாக அங்கிருந்த இளைஞா்கள் சிறுவனை மீட்டு, பள்ளிகொண்டா அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்குக் கொண்டு சென்றனா். அங்கு சிறுவனைப் பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

தகவலறிந்து விரைந்து சென்ற பள்ளிகொண்டா போலீஸாா், சிறுவனின் சடலத்தை மீட்டு, குடியாத்தம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இச்சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.