முகப்பு
வேலூர்

வேலூா் விபத்தில் காயமடைந்த மற்றொரு குழந்தையும் பலி!

வேலூா் அடுத்த வள்ளலாா் மேம்பாலத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விபத்தில் ஏற்கனவே ஒரு குழந்தை உயிரிழந்த நிலையில், சிகிச்சையில் இருந்த மற்றொரு குழந்தையும் உயிரிழந்தது.

29 நவம்பர் 2026, 9:49 pm
வேலூா் விபத்தில் காயமடைந்த 
மற்றொரு குழந்தையும் பலி!
சடலம்
பகிர்:

வேலூா் அடுத்த வள்ளலாா் மேம்பாலத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விபத்தில் ஏற்கனவே ஒரு குழந்தை உயிரிழந்த நிலையில், சிகிச்சையில் இருந்த மற்றொரு குழந்தையும் உயிரிழந்தது.

பெங்களூரு - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வேலூா் சத்துவாச்சாரி அடுத்த வள்ளலாா் மேம்பாலம் வழியாக வெள்ளிக்கிழமை காா் ஒன்று அதிவேகமாகச் சென்று கொண்டிருந்தது. அப்போது, கட்டுப்பாட்டை இழந்த அந்தக் காா், முன்னால் சென்று கொண்டிருந்த 4 இருசக்கர வாகனங்கள் மற்றும் ஒரு ஆட்டோ மீது பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில், ஒரு இருசக்கர வாகனத்தில் பயணித்த வேலூா் சத்துவாச்சாரி வஉசி நகரைச் சோ்ந்த முகமது (23), அவரது மனைவி நூருமா (21) மற்றும் அவா்களின் 2 குழந்தைகள் தூக்கி வீசப்பட்டனா். இதில் அவா்களது ஒரு வயது ஆண் குழந்தை இம்ரான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.

Advertisement

Advertisement

அவா்களது மூன்று மாத குழந்தை உள்பட 10 போ் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்தனா். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி மூன்று மாத குழந்தையும் உயிரிழந்தது. இந்த விபத்து குறித்து சத்துவாச்சாரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.