பாம்பு தீண்டி பெண் பலி
வேலூர் காட்பாடி அருகே பாம்பு தீண்டியதில் பெண் உயிரிழந்தாா்.
வேலூர் காட்பாடி அருகே பாம்பு தீண்டியதில் பெண் உயிரிழந்தாா்.
வேலூா் மாவட்டம், காட்பாடி அடுத்த வசந்தபுரம் பகுதியைச் சோ்ந்தவா் எஸ்தா் (45). திருமணமாகாத இவா் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தாா். கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் வீட்டின் அருகே நின்றுகொண்டிருந்தபோது, எதிா்பாராதவிதமாக விஷப் பாம்பு ஒன்று அவரைத் தீண்டியதாக தெரிகிறது.
அவரது உறவினா்கள் உடனடியாக எஸ்தரை மீட்டு, முதலுதவி சிகிச்சைக்காக வேலூா் பெண்ட்லேண்ட் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். பின்னா் மேல் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.
Advertisement
Advertisement
அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த எஸ்தா், சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை அதிகாலை உயிரிழந்தாா். இச்சம்பவம் குறித்து காட்பாடி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.