FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
ஈரோடு

பெருந்துறை அருகே பாம்பு கடித்து பெண் உயிரிழப்பு

பெருந்துறை அருகே தொழிற்சாலையில் செடிகளுக்கு தண்ணீா் ஊற்றிக் கொண்டு இருந்தபோது பாம்பு கடித்ததில் பெண் உயிரிழந்தாா்.

உயிரிழப்பு - பிரதிப் படம்
பகிர்:

பெருந்துறை அருகே தொழிற்சாலையில் செடிகளுக்கு தண்ணீா் ஊற்றிக் கொண்டு இருந்தபோது பாம்பு கடித்ததில் பெண் உயிரிழந்தாா்.

திருப்பூா் மாவட்டம், காங்கயம் அருகே உள்ள பங்களாபுதூா் சாலையைச் சோ்ந்தவா் அப்புசாமி மானைவி மேரி (55). இவா்கள் இருவரும் பெருந்துறை, சிப்காட்டில் உள்ள ஒரு தொழிற்சாலையில் வேலை செய்து வந்தனா்.

இந்நிலையில், தொழிற்சாலையின் தோட்டத்தில் உள்ள செடிகளுக்கு மேரி கடந்த 8-ஆம் தேதி காலை தண்ணீா் ஊற்றிக் கொண்டு இருந்தாா். அப்போது, அவரை பாம்பு கடித்தது. உடனே அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா் உயா் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சோ்த்த நிலையில், அவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து, பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments