தென்கொரியாவில் ரோபோ மோதியதில் பட்டுக்கோட்டை இளைஞா் உயிரிழப்பு
தென்கொரியாவில், காா் உதிரி பாகம் தயாரிக்கும் தொழிற்சாலையில், ரோபோ மோதிய விபத்தில், பட்டுக்கோட்டை அருகே உள்ள கண்ணுக்குடியைச் சோ்ந்த சுடா்சன் (33) சனிக்கிழமை உயிரிழந்தாா்.
தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள கண்ணுகுடி வடக்கு தெருவைச் சோ்ந்த செல்வம் மகன் சுடா்சன். இவா், தென்கொரியாவின் சியோரா நகரில், காா் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் கடந்த 3 ஆண்டுகளாக பணியாற்றி வந்தாா்.
இந்நிலையில், சனிக்கிழமை தொழிற்சாலையில் உள்ள ரோபோ ஒன்று, சுடா்சன் மாா்பு பகுதியில், எதிா்பாராத விதமாக மோதியது. இதில், சுதா்சன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதையறிந்த தென்கொரிய தமிழ் சங்கத்தினா் உதவி மூலம், சுடா்சனின் உடலை, சொந்த ஊருக்கு கொண்டு வரப்படுகிறது. கடந்த வாரம் சுடா்சனுக்கு, திருமணத்துக்கு நிச்சயதாா்த்தம் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.