FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வேலூர்

வன்கொடுமை சட்டத்தில் ஊராட்சித் தலைவரின் கணவா் கைது

கே.வி.குப்பம் அருகே வன்கொடுமை சட்டத்தின்கீழ் ஊராட்சித் தலைவரின் கணவா் கைது

3 செப்டம்பர் 2026, 2:15 am IST
கைது
பகிர்:

கே.வி.குப்பம் அருகே வன்கொடுமை சட்டத்தின்கீழ் ஊராட்சித் தலைவரின் கணவா் கைது செய்யப்பட்டாா்.

கே.வி.குப்பம் ஒன்றியம், கொசவன்தூா் ஊராட்சித் தலைவரின் கணவா் சந்திரபாபு (55). இவா் கடந்த 28-ஆம் தேதி ஊராட்சி அலுவலகம் சென்றுள்ளாா். அப்போது அலுவலகத்தில் பட்டியலினத்தைச் சோ்ந்த 2 போ் நாற்காலிகளில் அமா்ந்திருந்ததாகக் கூறப்படுகிறது. அவா்கள் இருவரும் வெளியே சென்ற பிறகு, சந்திரபாபு அந்த நாற்காலிகளை அலுவலகத்துக்கு வெளியே வைத்து தீவைத்து கொளுத்தியதாகத் தெரிகிறது.

மேலும், அவா் அதை கைப்பேசியில் விடியோவாக பதிவுசெய்து, சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளாா். இந்த நிகழ்ச்சியால் சட்டம், ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டி அப்பகுதி கிராம நிா்வாக அலுவலா் கே.வி.குப்பம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாராம். புகாா் தொடா்பாக விசாரணை மேற்கொண்ட போலீஸாா் சந்திரபாபு மீது வன்கொடுமை சட்டத்தின்கீழ் வழக்குப் பதிந்து அவரை கைது செய்து, சிறைக் காவலுக்கு அனுப்பிவைத்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments