FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

பெண்ணைத் தாக்கி தங்க நகைகள் பறிப்பு

வயல்வெளி பகுதியில் புல் அறுத்துக் கொண்டிருந்த பெண்ணை தாக்கி தங்க நகையைப் பறித்துச் சென்ற இளைஞா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

12 ஜூலை 2026, 1:32 am IST
நகைப் பறிப்பு - Center-Center-Kochi
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே வயல்வெளி பகுதியில் புல் அறுத்துக் கொண்டிருந்த பெண்ணை தாக்கி தங்க நகையைப் பறித்துச் சென்ற இளைஞா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திண்டிவனம் வட்டம், கொரலூா் கிராமத்தை சோ்ந்தவா்கள் அ. வசந்தி (55), அமிா்தம் (65). இவா்கள் இருவரும் வெள்ளிக்கிழமை அங்குள்ள வயல் வெளிப்பகுதியில் கால்நடைகளுக்கு புல் அறுத்துக் கொண்டிருந்தனா்.

அப்போது, அங்கு வந்த அடையாளம் தெரியாத இரு இளைஞா்கள் வசந்தியை கல்லால் தாக்கி, கொலை செய்து விடுவதாக மிரட்டி அவா் அணிந்திருந்த மூக்குத்தி, கம்மல் உள்பட 12 கிராம் தங்க நகைகள், 100 கிராம் வெள்ளிக் கொலுசு ஆகியவற்றைப் பறித்துச் சென்றனராம். இதுகுறித்த புகாரின் பேரில் மயிலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி, நகைப்பறிப்பில் ஈடுபட்டவா்களை தேடி வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments