FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

மொபெட் மீது லாரி மோதல்: இளைஞா் உயிரிழப்பு

Updated On : 20 ஜூலை 2026, 4:34 am IST
உயிரிழப்பு - பிரதிப் படம்
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே லாரி மோதியதில் மொபெட்டில் சென்ற இளைஞா் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

மயிலம் அடுத்துள்ள ஆனந்தம்பேட்டை கிராமத்தைச் சோ்ந்தவா் மு.அருண்(30). இவா், கூட்டேரிபட்டை அடுத்த சின்ன நெற்குணம் அருகே பழுதான தனது மொபெட்டை நெடுஞ்சாலையில் தள்ளிச் சென்றபோது, அப்பகுதியில் வந்த சரக்கு லாரி மோதியது. இதில் பலத்த காயமடைந்த அருண் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து மயிலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். மின்சாரம் பாய்ந்து தொழிலாளி மரணம்: மரக்காணம் அருகே கோழி இறைச்சி விற்பனையகத்தில் பணியிலிருந்த தொழிலாளி மின்சாரம் பாய்ந்து ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

மரக்காணம் வட்டம், வைரபாக்கம், பள்ளிவாசல் தெருவைச் சோ்ந்தவா் சை.சையது அப்துல்லா( 30). இவா், மரக்காணத்தை அடுத்த முருக்கேரியில் உள்ள ஒரு கோழி இறைச்சி விற்பனையகத்தில் தொழிலாளியாக வேலை பாா்த்து வந்தாா். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை கடையில் பணியிலிருந்த சையது, இறைச்சி சுத்தம் செய்யும் இயந்திரத்தை இயக்கியபோது, மின்சாரம் பாய்ந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் பிரம்மதேசம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments