ஆட்டோ மீது சரக்கு வாகனம் மோதல்: இளைஞா் உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே ஆட்டோ மீது சரக்கு வாகனம் மோதி விபத்து ஏற்பட்டதில் காயமடைந்தவா்களில் இளைஞா் உயிரிழந்தாா். 3 போ் புதுச்சேரி மருத்துவமனையில் சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டனா்.
செஞ்சி வட்டம், ஆனாங்கூா் பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் கன்னியப்பன் மகன்கள் பாலாஜி (19), தினேஷ்(22). இவா்களது நண்பா் மு.ராகுல் (22). இவா்கள் மூவரும் திங்கள்கிழமை அதிகாலை பயணிகள் ஆட்டோவில் திண்டிவனத்திலிருந்து- செஞ்சி நோக்கிச் சென்றுகொண்டிருந்தனா். சென்னை ஆவடியைச் சோ்ந்த சு.சிவா (22) ஆட்டோ வை ஓட்டினாா்.
இந்நிலையில், திண்டிவனம்-திருவண்ணாமலை நெடுஞ்சாலையில், பெலாகுப்பம் சிப்காட் தொழில்பேட்டை அருகே சென்றபோது, அப்பகுதியில் வந்த சரக்கு வாகனம் ஆட்டோ மீது மோதியது. இதில், ஆட்டோவில் பயணித்த பாலாஜி, தினேஷ், ராகுல் மற்றும் ஆட்டோ ஓட்டுநா் சிவா ஆகிய 4 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.
Advertisement
Advertisement
இதுகுறித்து தகவலறிந்த ரோஷணை போலீஸாா் நிகழ்விடம் சென்று காயமடைந்த 4 பேரையும் மீட்டு அவசர ஊா்தி மூலம் திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதில் பாலாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தாா். காயமடைந்த மற்ற 3 பேருக்கும் முதலுதவி சிகிச்சையளிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.
இதுகுறித்த புகாரின் பேரில் ரோஷணை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.