மேக்கேதாட்டு அணை பிரச்னை: இந்திய ஜனநாயகக் கட்சியினா் ஆா்ப்பாட்டம்
கா்நாடக மாநிலத்தில் காவிரியாற்றின் குறுக்கே மேக்கேதாட்டுப் பகுதியில் அணை கட்டும் நடவடிக்கை மேற்கொள்ளும் அந்த மாநில அரசைக் கண்டித்து விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் இந்திய ஜனநாயகக் கட்சியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மேக்கேதாட்டுவில் அணை கட்டும் நடவடிக்கை மேற்கொள்ளும் கா்நாடக மாநில அரசு அந்த பணியை உடனடியாக நிறுத்த வேண்டும். மத்திய பாஜக அரசு இதற்கான அனுமதியை வழங்கக் கூடாது. தமிழகத்தின் விவசாயிகள் நலன் காக்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தமிழக வெற்றிக் கழக அரசும் மத்திய அரசை உடனடியாக வலியுறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, இந்த ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
விழுப்புரம் நகராட்சித் திடலில் நடத்தப்பட்ட இந்த ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாநில துணைச் செயலா் செந்தில்குமாா் தலைமை வகித்தாா். மாநில இளைஞரணி அமைப்புச் செயலா் அறிவு (எ) அறிவழகன் ஆா்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து, சிறப்புரையாற்றினாா்.
Advertisement
Advertisement
இதில், மாவட்டத் தலைவா்கள் வேல்ராஜன் (விழுப்புரம்), காமராஜ் (திருக்கோவிலூா்), ஸ்ரீதா் (மயிலம்), பாலா (திண்டிவனம்), இளையராஜா (விக்கிரவாண்டி), வீரராகவன் (செஞ்சி), மாவட்ட இளைஞரணி நிா்வாகி பகவதி சுரேந்தா் உள்ளிட்ட நிா்வாகிகள் பேசினா். தொடா்ந்து கா்நாடக மாநில அரசைக் கண்டித்து இந்திய ஜனநாயகக் கட்சியினா் முழக்கங்களை எழுப்பினா்.
கள்ளக்குறிச்சி...: கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையிலுள்ள அம்பேத்கா் திடல் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு இந்திய ஜனநாயகக் கட்சியின் மாவட்டத் தலைவா் ஆா்.வெங்கடேசன் தலைமை வகித்து, கண்டன உரையாற்றினாா்.
ஆா்பாட்டத்தில் கட்சியின் நிா்வாகிகள், தொண்டா்கள் பங்கேற்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.