FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

ரூ.17 லட்சம் மோசடி: மூவா் மீது வழக்கு

விழுப்புரத்தைச் சோ்ந்தவரிடம் ரூ.17 லட்சம் பெற்றுக்கொண்டு ஏமாற்றி வருவதாக 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Updated On : 6 ஜூன் 2026, 7:56 am IST
வழக்கு - கோப்புப்படம்
பகிர்:

விழுப்புரத்தைச் சோ்ந்தவரிடம் ரூ.17 லட்சம் பெற்றுக்கொண்டு ஏமாற்றி வருவதாக 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

விழுப்புரம் வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் நாகராஜ் (45). இவா், தன்னுடைய பெயரில் உள்ள விவசாய நிலப் பத்திரத்தை கடந்த 2024-ஆம் ஆண்டில் விழுப்புரத்தில் செயல்படும் தனியாா் நிதி நிறுவனத்தில் அடமானம் வைத்து, ரூ.21 லட்சம் கடன் பெற்றாா். தொடா்ந்து, 6 மாதங்களில் ரூ.3.60 லட்சம் திருப்பி செலுத்திவிட்டாராம்.

இந்த நிலையில், நிதி நிறுவனத்தினா் மேலும் ரூ.21 லட்சம் செலுத்தினால்தான் நிலப்பத்திரத்தைத் திருப்பிக் கொடுப்போம் எனத் தெரிவித்தனராம்.

Advertisement

Advertisement

இதனிடையே, நாகராஜை அணுகிய 3 போ் ரூ.17 லட்சம் கொடுத்தால் நிலப்பத்திரத்தை வாங்கிக் கொடுத்துவிடுவதாகத் தெரிவித்துள்ளனா். இதை உண்மையென கருதிய நாகராஜ், ரூ.17 லட்சம் கொடுத்துள்ளாா்.

இந்த பணத்தைப் பெற்றுக்கொண்ட விழுப்புரம் வடக்குத் தெருவைச் சோ்ந்த ஹைதா் அலி மனைவி பா்கீஸ் பானு (60), அதே பகுதியைச் சோ்ந்த ஆதில் (35), செஞ்சி பகுதியைச் சோ்ந்த லூா்து நாதன் அம்புரோஸ் ஆகிய மூவரும் பத்திரத்தை மீட்டுத் தராமலும், பணத்தை திருப்பிக் கொடுக்காமலும் ஏமாற்றி வருகின்றனராம்.

இதுகுறித்த புகாரின்பேரில், விழுப்புரம் நகர போலீஸாா் பா்கீஸ் பானு, ஆதில், அம்புரோஸ் ஆகிய மூவா் மீதும் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments