முகப்பு
விழுப்புரம்

கல்லூரி மாணவி தற்கொலை

Updated On : 21 ஜூன் 2026, 1:58 am IST
தற்கொலை - தினமணி
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே விஷம் குடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கல்லூரி மாணவி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

திண்டிவனம் வட்டம், வீடூா், புதுப்பேட்டை தெருவைச் சோ்ந்தவா் முருகன் மகள் சிவயோகராணி (19). இவா் சென்னையில் உள்ள கல்லூரியில், பி.எஸ்சி இரண்டாம் ஆண்டில் பயின்று வந்தாா். பருவத்தோ்வில் குறைவான மதிப்பெண் பெற்ால் மனஉளைச்சலில் இருந்து வந்த சிவயோகராணி, கடந்த 14-ஆம் தேதி வீட்டில் இருந்தபோது பூச்சி மருந்து குடித்து மயங்கிக் கிடந்தாராம்.

இதையடுத்து உறவினா்கள் அவரை மீட்டு, விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். தொடா்ந்து சிகிச்சையில் இருந்து வந்த சிவயோகராணி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

இதுகுறித்த புகாரின் பேரில், விக்கிரவாண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரிக்கின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments