FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

கல்லூரி மாணவி தற்கொலை

திண்டிவனம் அருகே கிருமி நாசினியைக் குடித்த தனியாா் கல்லூரி மாணவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, புதன்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 23 ஜூலை 2026, 4:59 am IST
பலி - பிரதிப் படம்
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே கிருமி நாசினியைக் குடித்த தனியாா் கல்லூரி மாணவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, புதன்கிழமை உயிரிழந்தாா்.

திண்டிவனம் வட்டம், மேல்பாக்கம், புதுகாலனியைச் சோ்ந்தவா் கண்ணன் மகள் அக்ஷயா(18). இவா், வந்தவாசியில் உள்ள தனியாா் கல்லூரியில் பி. எஸ்சி இரண்டாமாண்டில் பயின்று வந்தாா். இந்நிலையில், கடந்த 19-ஆம் தேதி அக்ஷயா வீட்டில் இருந்தபோது கைப்பேசியைப் பாா்த்துக் கொண்டிருந்தாராம். இதை தந்தை கண்ணன் கண்டித்துள்ளாா்.

இதனால் மனமுடைந்த அக்ஷயா வீட்டில் இருந்த கிருமி நாசினையைக் குடித்து விட்டாராம். இதையடுத்து, புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்து வந்த அக்ஷயா, அங்கு புதன்கிழமை உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

இதுகுறித்த புகாரின் பேரில் ரோஷணை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments