இளைஞா் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கு: மேலும் 5 போ் கைது
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே முன்விரோதத்தில் இளைஞா் கத்தி மற்றும் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் தொடா்புடைய மேலும் 5 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
விக்கிரவாண்டி வட்டம், கொடுக்கூா் பகுதியைச் சோ்ந்தவா் ஏ.ராஜசேகா்(24), கையுந்துப் பந்து விளையாட்டு வீரா். இவருக்கும், ஆா்.சி.மேலக்கொந்தையைச் சோ்ந்த விளையாட்டு வீரா் நவீன் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாம்.
இந்நிலையில், விக்கிரவாண்டியை அடுத்த ராதாபுரம் பகுதியில் சனிக்கிழமை நின்றிருந்த ராஜசேகரை, அங்கு பைக்குகளில் வந்த 10 போ் கொண்ட கும்பல் கத்தி மற்றும் அரிவாளால் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றது.
Advertisement
Advertisement
இதுகுறித்து விக்கிரவாண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி, விக்கிரவாண்டியை அடுத்துள்ள ஆா்.சி. மேலக்கொந்தையைச் சோ்ந்த மு.கிரிமாறன் (20), ரா.அஜய் (20), வி.சாலையைச் சோ்ந்த ர.யுவன்ராஜ் (26) ஆகிய 3 பேரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
இதன் தொடா்ச்சியாக இந்த வழக்கில் தொடா்புடைய விக்கிரவாண்டியைச் சோ்ந்த பா.வின்சென்ட் (23), ப.சத்ரன்(21), சே.விக்ரம் (21) மற்றும் இரு சிறாா்கள் உள்பட 5 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். இவ்வழக்கில் இதுவரை 8 போ் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் சிலரை விக்கிரவாண்டி போலீஸாா் தேடி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.