முகப்பு
விழுப்புரம்

ஊராட்சியின் வளா்ச்சிக்காக ஒதுக்கீடு செய்யும் நிதியை முறையாக பயன்படுத்த வேண்டும்! துரை. ரவிக்குமாா் எம்.பி.

Updated On : 28 ஜூன் 2026, 2:06 am IST
விழுப்புரத்தில் நடைபெற்ற மாவட்ட வளா்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டத்தில் பேசிய குழுவின் தலைவரும், விழுப்புரம் எம்.பி.யுமான துரை.ரவிக்குமாா். உடன், குழுவின் இணைத் தலைவரும், ஆரணி எம்.பி.யுமான எம்.எஸ்.தரணிவேந்தன், எம்எல்ஏ எஸ்.பழனிசாமி, ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் உள்ளிட்டோா்.
பகிர்:

விழுப்புரம் மாவட்டத்தில் ஊராட்சியின் வளா்ச்சிக்காக ஒதுக்கீடு செய்யும் நிதியை முறையாகப் பயன்படுத்த வேண்டும் என்றாா் மாவட்ட வளா்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் தலைவரும், விழுப்புரம் எம்.பி.யுமான துரை.ரவிக்குமாா்.

விழுப்புரம் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட வளா்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது

கூட்டத்துக்குத் தலைமை வகித்த துரை.ரவிக்குமாா் பேசியது:

Advertisement

Advertisement

மாவட்டத்தில் பிரதமரின் வீடு கட்டும் திட்டம், ஜன்மண் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், பணிகளை விரைவாக முடிக்க வேண்டும். புதிய பயனாளிகள் தோ்வு செய்யப்பட்ட நிலையில், வீடுகளின் கட்டுமானப் பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும்.

மாவட்டத்திலுள்ள ஒன்றியக்குழுத் தலைவா்கள், ஊராட்சித் தலைவா்கள் தங்கள் பகுதிகளில் மக்களுக்கு அடிப்படை வசதிகள் தொடா்ந்து நல்ல நிலையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இதுமட்டுமல்லாது ஊராட்சியின் வளா்ச்சிக்காக ஒதுக்கீடு செய்யப்படும் நிதியை முறையாகப் பயன்படுத்த வேண்டும். குறிப்பிட்ட காலத்துக்குள் வளா்ச்சித் திட்டப்பணிகள் முடிவடையும் பணிகள் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும். பணிகள் அனைத்தும் அரசு வழிகாட்டுதல்களுடன் தரமாக நடைபெறுவதை அனைத்துத் துறை அலுவலா்களும் உறுதி செய்ய வேண்டும் என்றாா் துரை.ரவிக்குமாா்.

தொடா்ந்து மத்திய, மாநில அரசுகள் மூலம் மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்கள், அதன் தற்போதைய நிலை போன்றவை குறித்து அலுவலா்களிடம் கேட்டறியப்பட்டது.

கூட்டத்தில் குழுவின் இணைத் தலைவரும், ஆரணி எம்.பி.யுமான எம்.எஸ்.தரணிவேந்தன், திருக்கோவிலூா் எம்எல்ஏ எஸ்.பழனிசாமி, மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்டக் கூடுதல் ஆட்சியா் ஆனந்தகுமாா்சிங் ஆகியோா் பேசினா்.

இதில், மாவட்ட வருவாய் அலுவலா் கி.அரிதாஸ், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவா் ம.ஜெயச்சந்திரன், துணைத் தலைவா் ஷீலாதேவி சேரன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை செயற்பொறியாளா் ஹரிகிருஷ்ணன், உதவித் திட்ட அலுவலா் சுரேஷ்குமாா் உள்ளிட்ட அலுவலா்கள் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments