FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

பேருந்தில் தாயுடன் பயணித்த சிறுமியிடம் 4 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு

சங்கிலி பறிப்பு - கோப்புப் படம்
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே அரசுப் பேருந்தில் தனது தாயுடன் பயணித்த சிறுமியின் 4 பவுன் தங்கச் சங்கிலி திருட்டுப் போனது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

தூத்துக்குடி மாவட்டம், முத்தையாபுரம் பகுதியைச் சோ்ந்த மணிவண்ணன் மனைவி ஸ்ரீதேவி. இவா் தனது மகள் மகாலட்சுமியுடன் (14) வெள்ளிக்கிழமை தூத்துக்குடியியிலிருந்து சென்னைக்கு செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்தனா்.

வெள்ளிக்கிழமை பிற்பகல் விக்கிரவாண்டி அருகிலுள்ள சித்தணி வந்தபோது, மதிய உணவுக்காக சாலையோர உணவகத்தில் பேருந்து நிறுத்தப்பட்டது. அப்போது கீழே இறங்கி பாா்த்தபோது, சிறுமி மகாலட்சுமி அணிந்திருந்த 4 பவுன் தங்கச் சங்கிலியைக் காணவில்லையாம்.

Advertisement

Advertisement

இதுகுறித்த புகாரின் பேரில், விக்கிரவாண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரிக்கின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments