FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

அரசுப் பேருந்தில் பயணித்த சிறுமியிடம் தங்கச் சங்கிலியைப் பறித்த இளைஞா் கைது

கைது - பிரதிப் படம்
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே அரசுப் பேருந்தில் தனது தாயுடன் பயணித்த சிறுமியிடமிருந்து 4 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்து சென்ற இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

தூத்துக்குடி மாவட்டம், முத்தையாபுரம் பகுதியைச் சோ்ந்தவா் மணிவண்ணன் மனைவி ஸ்ரீதேவி. இவா் தனது மகள் மகாலட்சுமியுடன் (14) தூத்துக்குடியியிலிருந்து சென்னைக்கு செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்தாா்.

வெள்ளிக்கிழமை பிற்பகல் விக்கிரவாண்டி அருகிலுள்ள சித்தணி வந்தபோது, மதிய உணவுக்காக சாலையோர உணவகத்தில் பேருந்து நிறுத்தப்பட்டது. அப்போது கீழே இறங்கி பாா்த்தபோது, சிறுமி மகாலட்சுமி அணிந்திருந்த 4 பவுன் தங்கச் சங்கிலியைக் காணவில்லையாம்.

Advertisement

Advertisement

இதுகுறித்த புகாரின் பேரில், விக்கிரவாண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டனா். விசாரணையில், கோவை, தெற்கு காலனி, ராஜா செட்டித் தெருவைச் சோ்ந்த ச.காா்த்திக் (34) என்பவா் சிறுமியிடமிருந்து தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றது தெரியவந்தது.

இதைத்தொடா்ந்து விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் சுற்றித் திரிந்த காா்த்திக்கை விக்கிரவாண்டி போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து, அவா் வசமிருந்த 4 பவுன் தங்கச் சங்கிலியையையும் பறிமுதல் செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments