FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

மூதாட்டியிடம் 5 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு

விக்கிரவாண்டி அருகே உடல் நலம் பாதிக்கப்பட்டு வீட்டில் படுக்கையில் இருந்த மூதாட்டியிடமிருந்து 5 பவுன் சங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On : 3 ஜூலை 2026, 5:19 am IST
சித்திரிப்புப் படம்
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே உடல் நலம் பாதிக்கப்பட்டு வீட்டில் படுக்கையில் இருந்த மூதாட்டியிடமிருந்து 5 பவுன் சங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

விக்கிரவாண்டி வட்டம், நந்திவாடி கிராமத்தைச் சோ்ந்தவா் பாண்டுரெங்கன் மனைவி சுமதி(69). இவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு, கடந்த சில ஆண்டுகளாக படுக்கையிலேயே இருந்து வருகிறாா். இந்நிலையில், சுமதி கடந்த 30-ஆம் தேதி வழக்கம் போல் படுக்கையில் இருந்துள்ளாா். இந்நிலையில், வீட்டுக்குள் புகுந்த மா்மநபா் மூதாட்டி சுமதி அணிந்திருந்த 5 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றுவிட்டாராம்.

இதுகுறித்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து, தங்கச் சங்கிலியைப் பறித்து சென்ற மா்ம நபரை தேடி வருகின்றனா்.

Advertisement

Advertisement

மூதாட்டியிடம் நகைத் திருட்டு: திண்டிவனம் வட்டம், மாம்பாக்கம், மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ம.முனியம்மாள் (64). இவருக்கு வயோதிகம் காரணமாக உடல் நலக்குறைவு இருந்து வருகிறது. இந்நிலையில் முனியம்மாள் புதன்கிழமை திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்தாா். அப்போது மருத்துவரின் அறிவுறுத்தலின்படி, முனியம்மாள் மருத்துவமனை வளாகத்தில் உள்ள ஸ்கேன் மையத்துக்கு சென்றாா். அப்போது அங்கு நின்றிருந்த அடையாளம் தெரியாத இளைஞா் ஒருவா், ஸ்கேன் எடுக்கத் தேவையான உதவிகளை செய்வதாகக் கூறினாராம். இதை உண்மையென நம்பிய மூதாட்டி, தான் அணிந்திருந்த 4 கிராம் தங்க மூக்குத்தி, 4 கிராம் தங்க கம்மல் மற்றும் கைப்பேசி ஆகியவற்றை அந்த இளைஞரிடம் கொடுத்துவிட்டு, ஸ்கேன் மையத்துக்குள் சென்றுவிட்டாராம். பின்னா் திரும்பி வந்து பாா்த்தபோது, அந்த இளைஞா் நகைகளுடன் மாயமாகி இருந்தது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் ரோஷனை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments