மாம்பழங்கள் பறிமுதல் கண்துடைப்பு நடவடிக்கை?
கடலூரில் கண்துடைப்பு நடவடிக்கையாக ரசாயனக் கற்கள் வைத்து பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களை உணவுப் பாதுகாப்புத் துறையினர் புதன்கிழமை பறிமுதல் செய்ததாகக் கூறப்படுகிறது.
கடலூரில் கண்துடைப்பு நடவடிக்கையாக ரசாயனக் கற்கள் வைத்து பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களை உணவுப் பாதுகாப்புத் துறையினர் புதன்கிழமை பறிமுதல் செய்ததாகக் கூறப்படுகிறது.
கடலூர் மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் தட்சிணாமூர்த்தி தலைமையில், உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் கடலூர் மஞ்சக்குப்பம் சுதர்சனம் தெருவில் உள்ள மாம்பழங்கள் சேமிப்புக் கிடங்கு ஒன்றில் புதன்கிழமை இரவு திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, கால்சியம் கார்பைடு கற்களைக் கொண்டு பழக்க வைக்கப்பட்ட 750 கிலோ மாம்பழங்களைப் பறிமுதல் செய்தனர்.
உணவுப் பாதுகாப்புத் துறையின் இந்த நடவடிக்கை கண்துடைப்பானது என்று சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டினர். மேலும் அவர்கள் கூறியதாவது; மாம்பழம் சீசன் தொடங்கி தற்போது முடிவடையும் நிலையில் உள்ளது. மாம்பழங்களின் வரத்து அதிகமாக இருந்த நேரங்களில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தற்போது, ஒரே ஒரு சேமிப்பு கிடங்கில் மட்டும் சோதனை நடத்தி வெறும் 750 கிலோ மாம்பழங்களை மட்டுமே பறிமுதல் செய்துள்ளனர். இந்த நடவடிக்கை முழுக்க முழுக்க ஆவணப் பதிவுக்காக மட்டுமே செய்யப்பட்டதாகும். இதனால், பொதுமக்களுக்கு எந்தப் பயனும் இல்லை. இதுபோன்ற நடவடிக்கைகள் மீது மாவட்ட ஆட்சியர் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.