FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

பண்ருட்டியில் ஆடிப்பூர பெருவிழா

பண்ருட்டி, மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தில் 9-ஆம் ஆண்டு ஆடிப்பூர பெருவிழா, கஞ்சி வார்த்தல், பால் அபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 20 ஆகஸ்ட் 2018, 10:00 am IST
பகிர்:

பண்ருட்டி, மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தில் 9-ஆம் ஆண்டு ஆடிப்பூர பெருவிழா, கஞ்சி வார்த்தல், பால் அபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பண்ருட்டி, எல்.ஆர்.பாளையத்தில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடம் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் ஆடிப்பூர பெருவிழா சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. சக்தி பீட தலைவர் எம்.முத்துகிருஷ்ணன் தலைமை வகித்தார். 
வட்டத் தலைவர் ஏ.ஏழுமலை  முன்னிலையில், கடலூர் மாவட்ட வர்த்தக சங்கத் தலைவர் டி.சண்முகம் கொடியேற்றினார். மாலை 5 மணியளவில் சக்தி பீடத்தில் வேள்வி தொடங்கியது. மாவட்டத் தலைவர் ஆர்.கிருபானந்தன் வேள்வியை தொடக்கி வைத்தார்.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணி அளவில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. 8 மணியளவில் சோமேஸ்வரர் கோயிலில் இருந்து கஞ்சி கலயம், பால் குடம், தீச்சட்டி ஊர்வலம் தொடங்கியது. ஊர்வலத்தை பண்ருட்டி மண்டல துணை வட்டாட்சியர் தனபதி கொடியசைத்து தொடங்கி 
வைத்தார்.  
தொடர்ந்து சக்தி பீடத்தில் கஞ்சி கலயத்துக்கு வரவேற்பும், கஞ்சி வார்த்தலும், கருவறை அன்னைக்கு பால் அபிஷேகமும் நடைபெற்றன. 
மதியம் கருவறை அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. நிகழ்ச்சியை முன்னிட்டு ஆன்மிக சொற்பொழிவு, அன்னதானம் நடைபெற்றது.
நிகழ்ச்சியில், மாவட்ட துணைத் தலைவர் முருகு.வெங்கட்ராமன், இளைஞரணி இணைச் செயலர் டி.கே.பழனிவேல், பிரசார செயலர் கே.சுப்பிரமணியன், பொருளாளர் கோ.ஜெயபால், மத்திய பிரசாரக் குழு எஸ்.சுப்பிரமணியன், வேள்விக்குழு செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments