FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

வெள்ளம் பாதிப்பு: மீட்புப் பணிக்காக 15 படகுகள்

கொள்ளிடக் கரையோரத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு மீட்புப் பணிக்காக 15 படகுகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

Updated On : 20 ஆகஸ்ட் 2018, 10:02 am IST
பகிர்:

கொள்ளிடக் கரையோரத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு மீட்புப் பணிக்காக 15 படகுகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
 சிதம்பரம் வட்டம், கொள்ளிடக்கரை பகுதியிலுள்ள திட்டுக்காட்டூர், மடத்தான்தோப்பு, வடக்குவேலக்குடி, பழையநல்லூர், கண்டியாமேடு, இளநாங்கூர் உள்பட 17 கிராமங்களிலும், காட்டுமன்னார் கோவில் வட்டத்தில் 4 கிராமங்களிலும் கொள்ளிடம் ஆற்று நீர் சூழ்ந்துள்ளது. இந்தப் பகுதிகளில் தமிழக தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத், மாவட்ட ஆட்சியர் வே.ப.தண்டபாணி மற்றும் மக்களவை பிரதிநிதிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர். 
 இந்த நிலையில், வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் உள்ள பொதுமக்களை பத்திரமாக மீட்பதற்கும், கூடுதல் தண்ணீர் வரத்தைக் கணக்கில் கொண்டும் 15 படகுகள் கடலோர பகுதிகளிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அதன்படி, கடலூர் அருகிலுள்ள தைக்கால்தோணித்துறையிலிருந்து 10 படகுகளை அனுப்பி வைக்கும் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் வே.ப.தண்டபாணி இந்தப் பணியை நேரில் ஆய்வு செய்தார்.
 ஒவ்வொரு படகுக்கும் நீச்சல், மீட்புப் பணியில் திறனுள்ள தலா 10 மீனவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 
தீயணைப்பு, காவல் துறையின் மீட்புப் படையினருடன் படகுகள் குழு இணைக்கப்பட்டுள்ளது. தண்ணீர் சூழ்ந்துள்ள இடத்துக்கு இந்தக் குழுவினர் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments