FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை மீறியதாக 256 வழக்குகள்: ரூ. 5.77 லட்சம் அபராதம் விதிப்பு

கடலூர் மாவட்டத்தில் உணவுப் பொருள்கள் பாதுகாப்புச் சட்டத்தை மீறியதாக 256 நிறுவனங்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக ரூ. 5.77 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

30 ஜனவரி 2024, 10:08 pm IST
பகிர்:

கடலூர் மாவட்டத்தில் உணவுப் பொருள்கள் பாதுகாப்புச் சட்டத்தை மீறியதாக 256 நிறுவனங்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக ரூ. 5.77 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
 கடலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கலப்படப் பொருள்களின் விற்பனை நடைபெற்று வருவதாக புகார்கள் வந்தன. இதுதொடர்பாக புதன்கிழமை மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் ந.தட்சிணாமூர்த்தி கூறியதாவது: மாவட்டத்தில், உணவுப் பொருள்களை விற்பனை செய்வதற்கு வணிகர்கள், அரசுத் துறை சார்பில் மொத்தம் 17,233 நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றைக் கண்காணிக்க 11 உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 2017-18 மற்றும் 2018-19 -ஆம் ஆண்டுகளில் உரிய அனுமதி பெறாமல் கடைகள் நடத்தி வருவதாக 108 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இவர்களில் 5 பேரைத் தவிர மற்றவர்கள் உரிய அனுமதி பெற்றதால், அந்த 5 பேர் மீது மட்டும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
 உணவில் கலப்படம், உடலுக்குத் தீங்கு விளைவிக்கக் கூடிய பொருள்களை விற்பனை செய்ததாக 38 பேர் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. அந்த வகையில், சத்துமாவு நிறுவனத்தில் காரீயம் அதிகமாக இருந்ததாகக் கூறி, அந்த நிறுவனத்துக்கும், விற்பனையாளருக்கும் சேர்த்து ரூ. 1.80 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டதுடன், அந்தப் பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
 இதேபோல, பெருங்காயம், முறுக்கு ஆகியவற்றில் செயற்கை நிறமி சேர்த்தது தொடர்பான வழக்கில் தலா ரூ. 40 ஆயிரமும், நாள்பட்ட பாமாயில் விற்பனை செய்ததாக ரூ. 30 ஆயிரமும் அபராதமும் விதிக்கப்பட்டது.
 விற்பனை பொருள்களில் அதற்கான உற்பத்தி, காலாவதி தேதி இல்லாதது, பொருள்களின் விபரம் இல்லாமல் விற்பனை செய்தது தொடர்பாக 110 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, மாவட்ட வருவாய் அலுவல் நீதிமன்றத்தால் 88 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டன.
 இதன் மூலமாக ரூ. 5.77 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
 அதேபோல, மாதந்தோறும் மாவட்டத்திலிருந்து 99 பொருள்களின் மாதிரிகள் எடுக்கப்பட்டு, பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
 பொதுமக்கள் தாங்கள் வாங்கும் பொருள்களின் தரம் குறைவாக இருப்பதாகவோ, கலப்படம் இருப்பதாகக் கருதினாலோ 94440 42322 என்ற கட்செவ் (வாட்ஸ்அப்) எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என்றார் அவர்.
 உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் பெ.நல்லதம்பி, தா.ரவிச்சந்திரன், பா.சந்திரசேகரன், சு.ஏழுமலை ஆகியோர் உடனிருந்தனர்.
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments