FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

கடலூர் மாவட்டத்தில் ஜூன் 9-இல் பொது விநியோகத் திட்ட குறைதீர் கூட்டம்

கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் தேர்வு செய்யப்பட்ட கிராமங்களில் பொது விநியோகத் திட்ட குறைதீர் கூட்டம் ஜூன் 9- ஆம் தேதி நடைபெற உள்ளது.

Updated On : 7 ஜூன் 2018, 8:57 am IST
பகிர்:

கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் தேர்வு செய்யப்பட்ட கிராமங்களில் பொது விநியோகத் திட்ட குறைதீர் கூட்டம் ஜூன் 9- ஆம் தேதி நடைபெற உள்ளது.
 இதுகுறித்து செய்தி - மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
 கடலூர் மாவட்டத்தில் ஜூன் 9- ஆம் தேதி அனைத்து வட்டங்களிலும் தேர்வு செய்யப்பட்ட ஒரு கிராமத்துக்கான பொது விநியோகத் திட்ட குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது.
 அதன்படி, கடலூர் வட்டத்தில் காராமணிக்குப்பம், பண்ருட்டி வட்டத்தில் அக்கடவல்லி, குறிஞ்சிப்பாடி வட்டத்தில் திம்மராவுத்தன்குப்பம், சிதம்பரம் வட்டத்தில் இடையான்பால்சொரி, காட்டுமன்னார்கோவில் வட்டத்தில் கலிகடந்தான், புவனகிரி வட்டத்தில் பிரசன்னராமபுரம், திருமுட்டம் வட்டத்தில் சக்கரமங்கலம், விருத்தாசலம் வட்டத்தில் இருசாலக்குப்பம், திட்டக்குடி வட்டத்தில் வெண்கரும்பூர், வேப்பூர் வட்டத்தில் மேமாத்தூர் ஆகிய கிராமங்களில் இந்தக் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது.
 இந்தக் கிராமங்களுக்கு உள்பட்ட பொதுமக்கள் தங்களது மின்னணு குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம், முகவரி மாற்றம், புதிய மின்னணு அட்டை கோருதல் உள்ளிட்ட பொது விநியோகம் தொடர்பான கோரிக்கைகளை மனுவாக அளித்து பயன் பெறலாம் என அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments