தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்கு வீட்டுமனைப் பட்டா கோரி மனு
தொளாரில் வசிக்கும் தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.
தொளாரில் வசிக்கும் தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.
இதுதொடர்பாக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கடலூர் மண்டலச் செயலர் சு.திருமாறன் தலைமையில், தொளார் ஊராட்சியைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட சமூக மக்கள் திங்கள்கிழமை கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் நாள் கூட்டத்தில் அளித்த மனு:
தொளார் ஊராட்சிக்குள்பட்ட செங்கமேடு கிராமத்தில் சுமார் 150-க்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர், அருந்ததியர் சமூக குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் ஒவ்வொரு வீட்டிலும் இட நெருக்கடியில் வசித்து வருகின்றனர். மாணவர்கள் வீட்டில் படிப்பதற்குக் கூட இடமில்லாமல் தவித்து வருகின்றனர். தமிழக அரசு வழங்கும் இலவச வீட்டுமனைப் பட்டா இதுவரை இந்தக் கிராமத்தில் வழங்கப்படவில்லை.
எனவே, இந்தக் கிராமத்தில் உள்ள நத்தம் புறம்போக்கு நிலத்தைக் கையகப்படுத்தி, வீட்டுமனையாக இங்கு வசிக்கும் தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்கு வழங்க வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.