ஆசிரியர் தின விழாக் கொண்டாட்டம்
கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் ஆசிரியர் தின விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் ஆசிரியர் தின விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
சிதம்பரம் ராணி சீதை ஆச்சி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற ஆசிரியர் தின விழாவை பள்ளித் தலைமை ஆசிரியர் சி.பாஸ்கரன் தொடக்கிவைத்துப் பேசினார். பெற்றோர் - ஆசிரியர் கழகத் தலைவர் எஃப். ஆசிர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட அண்ணா.சிங்காரவேலு ஆசிரியர் தின உரையாற்றினார்.
முன்னாள் தலைமை ஆசிரியர் ஆர்.தர்பாரண்யன் வாழ்த்திப் பேசினார். தமிழாசிரியை எஸ்.ஜோஸ்பின் தேவகிருபை நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். ஆசிரியை சவிதா நன்றி கூறினார்.
சிதம்பரம் வீனஸ் குழுமப் பள்ளிகள் சார்பில், வீனஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு பள்ளி முதல்வர் ரூபியாள் ராணி தலைமை வகித்தார். கல்வி அலுவலர் ஜி.மகேஷ்சுந்தர் முன்னிலை வகித்தார். பள்ளித் தாளாளர் எஸ்.குமார் டாக்டர் ராதாகிருஷ்ணன் உருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
விழாவில் ஆசிரியர்கள், அலுவலர்கள் அனைவருக்கும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.
இதேபோல, வீனஸ் மழலையர் - தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் மருத்துவர் வி.சிவப்பிரகாசம் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் பேசினார். காட்டுமன்னார்கோவிலில் உள்ள கலைமகள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு பள்ளி நிறுவனர் வி.முத்துக்குமரன் தலைமை வகித்தார். தாளாளர் எம்.பரணிதரன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக சேத்தியாதோப்பு காவல் சரக துணைக் கண்காணிப்பாளர் ஜே.ஜவஹர்லால் பங்கேற்றுப் பேசினார். விழாவில் ஆசிரியர்கள் கெüரவிக்கப்பட்டனர்.
விழாவில் கிட்ஸ் பள்ளி நிறுவனர் எம்.நவநீதம், பெற்றோர்- ஆசிரியர் கழகத் தலைவர் கலியபெருமாள், மாணவர்கள் பங்கேற்றனர். பள்ளி முதல்வர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.
விருத்தாசலத்தில்... விருத்தாசலம் ஜெயப்பிரியா சிபிஎஸ்இ பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு அலுவலக மேலாண்மை அதிகாரி சேதுராமன், மக்கள் தொடர்பு அதிகாரி ஞானபிரகாசம் ஆகியோர் தலைமை வகித்தனர். முதுநிலை முதல்வர் சங்கரய்யா, முதல்வர் ஸ்ரீலதா முன்னிலை ஆகியோர் வகித்தனர். பள்ளித் தாளாளர் சி.ஆர்.ஜெயசங்கர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசினார். பின்னர், ஆசிரியைகளுக்கு இனிப்புகள் வழங்கிப் பாராட்டினார்.
இதேபோல, மேல்கவரப்பட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு பள்ளித் தலைமை ஆசிரியை ஆர்.கோமதி தலைமை வகித்தார். சீஷா தொண்டு நிறுவனம் சார்பில் வழங்கப்பட்ட பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களை அண்ணாகிராமம் மதிமுக ஒன்றியச் செயலர் எஸ்.கே.வெங்கடேசன் வழங்கினார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.