தனித் தேர்வர்கள் மதிப்பெண் சான்றிதழ் பெற செப்.18-க்குள் விண்ணப்பிக்கலாம்
கடந்த செப்டம்பர் 2010 வரை எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதிய தனித் தேர்வர்கள் தங்களது பெறப்படாத மதிப்பெண் சான்றிதழ்களை செப்டம்பர் 18-ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம் என
கடந்த செப்டம்பர் 2010 வரை எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதிய தனித் தேர்வர்கள் தங்களது பெறப்படாத மதிப்பெண் சான்றிதழ்களை செப்டம்பர் 18-ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம் என கடலூர் அரசுத் தேர்வு துறை மண்டலத் துணை இயக்குநர் ரா.வீரக்குமார் தெரிவித்தார்.
இதுகுறித்து புதன்கிழமை அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடந்த செப்டம்பர் 2010 வரையில் எஸ்.எஸ்.எல்.சி பொதுத் தேர்வு எழுதிய தனித் தேர்வர்களின் பெறப்படாத மதிப்பெண் சான்றிதழ்கள் கடலூர் அரசுத் தேர்வுத் துறை மண்டலத் துணை இயக்குநர் அலுவலகத்தில் திரும்பப் பெறப்பட்டுள்ளது.
எனவே, தேர்வு எழுதி மதிப்பெண் சான்றிதழ் பெறாத தனித் தேர்வர்கள், ஆதார் அட்டை நகலுடன் வெள்ளைத் தாளில் தேர்வு எண், தேர்வு எழுதியப் பருவம், பிறந்த தேதி, தேர்வு எழுதிய பாடம், தேர்வு மையத்தின் பெயர் ஆகிய விவரங்களைக் குறிப்பிட்டு ரூ. 45-க்கான அஞ்சல் வில்லை ஒட்டப்பட்ட சுய முகவரி எழுதிய உறையை இணைத்து, அரசுத் தேர்வுகள் மண்டலத் துணை இயக்குநர் அலுவலகம், மஞ்சக்குப்பம், கடலூர்-1 என்ற முகவரிக்கு 18.9.2018-க்குள் அனுப்பிப் பெற்றுக் கொள்ளலாம்.
அதேபோல, செப்டம்பர் 2010-க்கு பிறகு தேர்வு எழுதியவர்களும் அசல் மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம் என அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.