FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

பல்கலை.யில் ஆசிரியர் தின விழா

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் தின விழா சாஸ்திரி அரங்கில் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

30 ஜனவரி 2024, 10:11 pm IST
பகிர்:

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் தின விழா சாஸ்திரி அரங்கில் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
 அங்கு, அலங்கரித்து வைக்கப்பட்ட டாக்டர் ராதாகிருஷ்ணன் படத்துக்கு பல்கலை. துணைவேந்தர் வி.முருகேசன் தலைமையில் அனைவரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
 பல்கலை. பதிவாளர் கே.ஆறுமுகம் வரவேற்றார்.
 துணைவேந்தர் வே.முருகேசன் தலைமை வகித்துப் பேசினார்.
 மத்திய பணியாளர் தேர்வாணைய முன்னாள் உறுப்பினரும், அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தருமான இ.பாலகுருசாமி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் பேசினார்.
 விழாவில் பல்கலைக்கழக ஆசிரியர்கள், படிப்பு மைய அதிகாரிகள் 41 பேருக்கு விருது மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. அறிவியல் புல முதல்வர் எஸ்.கபிலன் நன்றி கூறினார்.
 பல்கலை. மொழிப்புல முதல்வர் வி. திருவள்ளுவன், தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி இராம.சந்திரசேகரன், தொலைதூரக் கல்வி மைய இயக்குநர் எம்.அருள், பல்கலை. புல முதல்வர்கள், துறைத் தலைவர்கள், முன்னாள் - இன்னாள் ஆசிரியர்கள், ஊழியர்கள், மாணவ - மாணவிகள் உள்படப் பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments